Published On:Tuesday, October 25, 2016
Posted by We Are Anonymous

பாடகர் சிலி பிணையில் விடுதலை

நபரொருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாடகர் ”சில்லி” (திலங்க விதூஷ), இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பெலவத்தை – விஜிதபுர பகுதியில் வைத்து ஒருவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த 11ம் திகதி தலங்கம பொலிஸாரால் சில்லி கைதுசெய்யப்பட்து பின்னர் கடுவளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை எதிர்வரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

10,000 ரூபாவான ரொக்கப்பிணை மற்றும் 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப்பிணையிலும் அவரை விடுதலை செய்ததுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை தலங்கம பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்ட கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, குறித்த வழக்கு எதிர்வரும் ஜனவரி 24ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் அறிவித்துள்ளார்.(ச)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

0 comments for " பாடகர் சிலி பிணையில் விடுதலை"

Leave a reply